கர்நாடகா தேர்தல் முடிவுகள் : தனிப்பெரும்பான்மையுடன் முன்னேறி வரும் காங்கிரஸ்.!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடந்து முடிந்த தேர்தலுக்கான முடிவுகள் தற்போது 36 மையங்களில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆரம்பத்தில் சற்று முன்னேறி வந்த ஆளும் பாஜக தற்போது கொஞ்சம் பின்னடைவை சந்தித்து வருகிறது.
தற்போது வரை 224 சட்டமன்ற தொகுதி முன்னிலை நிலவரத்தின்படி, ஆரம்பத்தில் சிறிய இடைவெளியில் பின்தங்கி இருந்த காங்கிரஸ் தற்போது 117 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அடுத்த இடத்தில் 83 இடங்களில் ஆளும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அடுத்ததாக, மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் பிற கட்சிகளும் முன்னிலை வகித்து வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025