இந்தியா

மின்சாரம் இலவசம்., 2 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.. VIPகளுக்கு மாதம் ரூ.4000.! காங். அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதல் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக தொடர்கிறது.

அதனால் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கடுமையாக போராடி வருகிறது. முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெலுங்கானா மாநிலத்திற்கு பிரசரத்திற்கு பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், சிலிண்டர் ரூ.500 உள்ளிட்ட முக்கிய 6 வாக்குறுதிகளை கூறி இருந்தார். அதன் பிறகு முழு தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவிக்காமல் இருந்து வநதது.

தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளை என்பதால், தங்கள் முழு தேர்தல் வாக்குறுதிகளையும் காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஏற்க்னவே குறிப்பிட்ட 6 வாக்குறுதிகளையும் சேர்த்து மொத்தமாக 62 வாக்குறுதிகள் இதில் அடங்கியுள்ளன.

காங்கிரஸ் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான சில வாக்குறுதிகள்….

  • ‘மகாலட்சுமி’ திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய்  நிதியுதவி,
  • ரூ.500க்கு கியாஸ் சிலிண்டர்.
  • பெண்களுக்கு இலவச பெருத்து பயணம்.
  • கிரஹ ஜோதி திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்.
  • சொந்த வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டு, வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு 5 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
  • தெலுங்கானா இயக்கப் போராளிகள் அனைவருக்கும் 250 சதுர அடியில் வீட்டு மனை வழங்கப்படும்.
  • மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பீடி தொழிலாளர்கள், ஒற்றை பெண்கள், இன்று தட்டிப்பறிப்பவர்கள், நெசவாளர்கள், எய்ட்ஸ் மற்றும் ஃபைலேரியா நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், வேலை இல்லா இளைஞர்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் 4,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • 10 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
  • விவசாயிகளின் 2 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.
  • விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் இலவசம்.

இந்த தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டபின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”  பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகளின் மோசடிகளை பொதுமக்கள் புரிந்துகொண்டுள்ளனர். பிரதமர் மோடியும், கே.சி.ஆரும் ( முதல்வர் சந்திரசேகர் ராவ்) இணைந்து எவ்வளவு முயற்சி செய்தாலும், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்” என்றும் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago