கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம்… ரத்து செய்ய காங்கிரஸ் அரசு முடிவு.!
கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்யவுள்ளதாக காங்கிரஸ் அரசு முடிவு.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், கல்வித்துறைகளில் பாஜகவால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல, கர்நாடகாவை 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பாடப்பகுதிகளில் இடம்பெற்றிருந்த ஆர்.எஸ்.எஸ், ஹிந்துத்துவா உள்ளிட்ட அதன் சம்பந்தமுடைய தலைவர்களின் பாடங்கள் நீக்கப்படவுள்ளன.
இன்று நடைபெற்ற கர்நாட அமைச்சரவையில் கல்வியமைச்சர் மது பங்காரப்பா, இது குறித்த அறிவிப்பை தெரிவித்தார். மேலும் அனைத்து கல்விக்கூடங்கள், கல்வி நிலையங்களிலும் இந்திய அரசியல் சாசன முகப்பு வரிகளை கட்டாயமாக வாசிக்கப்படவேண்டும் என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதற்கு முந்தைய பாஜக அரசு கொண்டுவந்த மதமாற்ற தடை சட்டத்தையும் திரும்பப்பெற கர்நாட அமைச்சரவையில் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.