எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!இன்று வெளியாகிறது
இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதேபோல் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .இந்நிலையில் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியுள்ளது.இரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது.
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதி மற்றும் கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.ஏற்கனவே ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப் போவதாக அறிவித்து உள்ளது காங்கிரஸ் கட்சி.இதனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.