லடாக் எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ள இந்தியா -சீனா முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான் இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.
இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது , ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்தது.
எனவே நேற்று எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டதாநிலையில், நேற்று இருநாட்டு ராணுவ கமாண்டர்களுக்கிடையில் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் கிழக்கு லடாக்கின் பதற்றம் நிறைந்த பகுதிகளிலிருந்து இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ள ஒருமித்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.நேற்று சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2 நாட்டு படைகளை விலக்கிக் கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்ந்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…