இனி இந்தியாவே வேண்டாம்.. கடைசி 40 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்த டிக் டாக் நிறுவனம்.!
இந்தியவில் இருந்த கடைசி 40 டிக் டாக் பயணிகளையு ம் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் இனி டிக்டாக் நுழைய முயற்சிக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது .
இளைஞர்கள் மத்தியில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த செயலி என்றால் டிக் டாக் செயலி தான். டப்மேஷ் செயலின் அடுத்த வெர்சன் . ரீல்ஸ்க்கு முன்னோடி என்று இருந்த இந்த செயலி மூலம் பிரபலமான இணயவாசிகள் ஏராளமானோர் இருக்கின்றனர். அப்படி இருந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருக்கும் போதே ‘டிக்டாக்’ செயலி திடீரென ஜூன், 2020ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக சுமார் 300 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. அதில் டிக்டாக் செயலியும் ஒன்று.
ரீல்ஸ்-ஷார்ட்ஸ் வளர்ச்சி : அதற்கு பிறகு பல்வேறு நாடுகளில் செய்யப்பட்ட டிக்டாக், இந்தியாவில் மீண்டும் பயன்பாடு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டது. இருந்தும் எதுவும் பயனளிக்காத காரணத்தாலும், அடுத்தடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என பெருமளவு இணையுலகில் வளர்ந்து வந்த காரணத்தாலும் டிக் டாக் மீண்டும் இந்தியாவில் தொடர முடியாமல் போனது.
கடைசி பணியாளர்கள் : இதன் காரணமாக அவ்வபோது இந்தியாவில் வேலை செய்யும் தங்கள் பணியாளர்களை நீக்கி வந்தது டிக் டாக் நிறுவனம். கடைசியாக 40 பணியாளர்கள் மட்டுமே இந்தியாவில் பணியில் இருந்து வந்தனர். அவர்களையும் பணிநீக்கம் செய்யும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு ஊழியர்களுக்கு வந்துள்ளதாம்.
இந்தியா வேண்டாம் : அந்த 40 பணியாளர்களுக்கும் பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே நிறுவனத்திடம் இருந்து இந்த செய்தி பெறப்பட்டதாகவும், பணிநீக்கத்திற்கு முன்னதாக வேறு வேலை தேடிக் கொள்ளும்படி அறிவுறுத்தபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இனி இந்தியாவில் டிக்டாக் நிறுவனம் செயல்பட முயற்சி மேற்கொள்ளாது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.