மதுக்கடைக்கு முன் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு!
பெங்களூருவில், குடிமகன் ஒருவர் மதுக்கடைக்கு முன் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு.
இந்தியாவில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகாய்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் சில மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காலை முதலே மதுபாத்தில் வாங்க வரிசையில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் காத்திருந்து வாங்கி சென்றனர்.
இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள ஒரு கடை முன், குடிமகன் ஒருவர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.