“மாணவர்களே…இது போலியானது” – சிபிஎஸ்இ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜன.25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று CBSE வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் டேர்ம் 1 போர்டு தேர்வுகளை நடத்தியது.இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படும் சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதாவது,மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 25.01.2022 அன்று அறிவிக்கப்படும் என ஜனவரி 22 தேதியிட்ட வெளியான போலியான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,சிபிஎஸ்இ (CBSE) தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான செயல்முறையை மாற்றியுள்ளதாகவும், குறிப்பாக விண்ணப்பதாரர்கள் தங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை, “புதிய” இணைய போர்ட்டலில் உள்நுழைய பயன்படுத்தி அவர்களின் மதிப்பெண்களை சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலயில்,சிபிஎஸ்இ நிர்வாகத்தால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் இந்த சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#cbseforstudents #Exams #Fake #CBSE pic.twitter.com/HpeUKjfShd
— CBSE HQ (@cbseindia29) January 25, 2022