சீன இராணுவம் லடாக்கில் உள்ள 1000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.!
லடாக்கில் 1000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை சீன இராணுவம் ஆக்கிரமித்து கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா பாங்கோங்கிடிசா மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அத்துமீறியதாக கூறியதை அடுத்து இந்தியா – சீனா எல்லையான எல்ஏசி எனப்படும் கட்டுப்பாட்டின் கோட்டு பகுதியில் சீனா இராணுவ வீரர்களை குவித்தது. அதனையடுத்து இந்தியா – சீனா இராணுவ வீரர்களிடையில் கடந்த மே மாதங்களில் மோதல் ஏற்பட்டதை அடுத்து பல இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து சீனா இராணுவ வீரர்களை எல்ஏசி கட்டுபாட்டு கோட்டின் கீழ் குவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூத்த அதிகாரி ஒருவர் சீனா தனது இராணுவ படைகளை டெப்சாங் சமவெளியில் இருந்து சூஷூல் பகுதி வரை குவித்துள்ளதாகவும், மேலும் சீனா படை வீரர்கள் டெப்சாங் சமவெளியில் பேட்ரோலிங் பாய்ண்ட் 10 முதல் 13 வரையிலான தூரத்தில் உள்ள 900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது என்று கருதுவதாக கூறியுள்ளார். மேலும் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 12 சதுர கி.மீட்டர், சூஷூல் அருகே உள்ள பகுதிகளில் 20 சதுர மீட்டர், பாங்கோங் சோ ஏரி அருகே 65 சதுர கி.மீட்டர் பரப்பளவையும் சீனா ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக இந்தியா கருதுவதாக அதிகாரி கூறியுள்ளார்.