சிறுத்தையிடம் சிக்கிய பேத்தியை மீட்க சிறுத்தையுடன் சண்டையிட்ட தாத்தா-பாட்டி.
மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் குனோ தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள துரா கிராமத்தில் தாத்தா, பாட்டி மற்றும் அவர்களது பேத்தி ஆகியோர் தங்களது வீட்டில் தரையில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த சிறுத்தை தரையில் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தையை வாயில் கவ்விக் கொண்டு சென்றுள்ளது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி, சிறுத்தையின் தாடையில் குழந்தையின் வலது காலைக் கண்டு அலறி கத்தினார். குழந்தையை இழுத்து செல்ல முயன்ற சிறுத்தையை, பாட்டி உதைத்துள்ளார். பின் பாட்டி மற்றும் பேத்தியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த, பேத்தியின் தாத்தாவான, ஜெய் சிங் குர்ஜார் சிறுத்தையின் மூக்கு மற்றும் கண்களில் உதைத்தார். பின் சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டது.
பின் அந்த சிறுத்தை குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி இருவரையும் கடிக்க முயன்றுள்ளது. அதற்குள் சுற்றியுள்ள அக்கம்பக்கத்தினர் குச்சிகளுடன் வர, அது காட்டுக்குள் ஓடியுள்ளது. கர்ஹால் தொகுதியில் உள்ள துரா, குனோ தேசிய பூங்காவிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது எனது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, குனோ கோட்ட வன அலுவலர் பி.கே.வர்மா கூறுகையில், சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வோம் என கூறியுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…