காங்கிரஸ் ஆட்சியமைத்தால் கடந்த முறை போல இந்த முறையும்… சத்தீஸ்கர் முதல்வர் வாக்குறுதி.!

Chhattisgarh CM Bhupesh Baghel

வரும் நவம்பர் மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும், ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சியும், 2 மாநிலத்தில் மாநில கட்சிகளின் ஆட்சியும் நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பூபேஷ் பாகேல் பொறுப்பில் இருக்கிறார். சத்தீஸ்கரில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு.! முதல்வர் அறிவிப்பு.!

இதற்கிடையில் அண்மையில் சக்தி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் கடந்த முறை போல இந்த முறையும் மாநிலத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அதிரடியாய் அறிவித்தார். கடந்த முறை ஆட்சி காலத்தில் 18.82 லட்சம் விவசாயிகளின் 9,270 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 வரும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 90 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் அரசு அறிவித்துவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth