# justnow:இன்று ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு- 6 ஆண்டுகளுக்கு பின் நீதிபதி N.V.ரமணா தலைமை!

டெல்லியில் இன்று அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 39-வது தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டுக்கு 6 ஆண்டுகளுக்கு பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமை தாங்குகிறார்.
இதைத் தொடர்ந்து,நாளை (ஏப்ரல் 30-ஆம் தேதி) விக்யான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் முதல்வர்களின் கூட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் கடந்த 2016 இல் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் மற்றும் நீதி வழங்கல் முறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஆகியவை பரிசீலிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,இந்த மாநாட்டில் மாவட்ட நீதிமன்றங்களுக்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்,மாவட்ட நீதிமன்றங்களின் தகவல் தொழில்நுட்பத் தேவைகளுக்கான நிரந்தர கணினி அதிகாரிகள், அனைத்து பங்குதாரர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை அனுப்புதல்,செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025