மேலும் ஓர் ரஷ்ய நாட்டவர் இந்தியாவில் உயிரிழந்தார்.! பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு.!
ஒடிசா மாநில கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பலின் தலைமை பொறியாளர் மிலியாகோவ் செர்ஜி எனும் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒடிசாவில் ராயகடாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும் அரசியல்வாதியுமான பாவெல் அன்டோவ் மற்றும் அவரது நண்பர் விளாடிமிர் ஆகிய இரு ரஷ்ய நாட்டவரும் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து இன்று (செவ்வாய்) மேலும், ஒரு ரஷ்யர் ஒடிசாவில் உயிரிழந்துள்ளார். கடந்த பதினைந்து நாட்களில் ரஷ்யர்கள் உயிரிழப்பது இது மூன்றாவது சம்பவம் என்று ஒடிசா காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒடிசா மாநிலத்தில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கப்பலின் தலைமைப் பொறியாளர் மிலியாகோவ் செர்ஜி என்பவர் தான் மூன்றாவதாக உயிரிழந்த ரஷ்யர் ஆவர்.