தேர்தல் பத்திரங்கள்! விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்… கோடிகளை கொட்டி கொடுத்த நிறுவனங்கள்
Electoral bonds: எஸ்.பி.ஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ வங்கி தாக்கல் செய்த நிலையில் கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More – நெருங்கும் தேர்தல்! பாஜகவில் இணைந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் பெண் எம்.பி..!
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி நேற்று முன்தினம் சமர்ப்பித்திருந்தது. இந்த நிலையில் எஸ்.பி.ஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
இதில், எந்தெந்த நிறுவனங்கள் தனி நபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற விவரங்களும் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக மாற்றினார்கள் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
Read More – மக்களவை தேர்தல்… விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்..!
அதன்படி, ஏர்டெல், ஐடிசி டி எல் எப் என நாட்டின் பல முக்கியமான நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையை கோடிக்கணக்கில் கொட்டி வழங்கி உள்ளது. Future Gaming And Hotel Services என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாக வழங்கியது தெரியவந்துள்ளது.