Breaking:10% இடஒதுக்கீடு – மத்திய அரசு மேல்முறையீடு …!
மருத்துவப் படிப்பில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கானது கடந்த ஆக.25 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை உச்சநீதிமன்ற உத்தரவு இல்லாமல் மத்திய அரசுமேற்கொள்ளக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் அமல்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.