அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இந்தாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி அதாவது நாளை பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் துவங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
நாடாளுமன்ற் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், இந்த மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க பல்வேறு கட்சியினரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் மணிப்பூர், விலைவாசி பிரச்சனைகளை பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமான முறையில் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.