காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ” மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்”. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களுக்கு உடலுழைப்பு சார்ந்த ஊரக பகுதி வேலைகள் தொடர்ந்து 100 நாட்களுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒருநாள் சம்பளத்தை மத்திய அமைச்சகமானது, தொழிலாளர் ஊதிய உயர்வு சட்டம் 6சியின் படி அவ்வப்போது சம்பள விகிதம் உயர்த்தப்படும். இந்த சம்பள விகிதமானது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக உயரத்தப்படும்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழக்த்தில் 100 நாள் வேலை திட்டத்தின் சம்பள விகிதமானது 4.63 சதவீதம் உயர்த்தப்பட்டு, 281 ரூபாயாக இருந்த ஒருநாள் ஊதியம் 294 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட சதவீதம் படி சம்பள உயர்வை மதியா அரசு அமல்படுத்தி இருந்தது.
ஆனால் அதே சமயம் தற்போது 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கும் தொகையை வெகுவாக குறைத்து ஊரக வேலைத்திட்ட ஊழியர்களுக்கு மத்திய அரசு அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த 2022 – 2023ஆம் நிதியாண்டில் 89,000 கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு இந்த நடப்பாண்டில் 60,000 ரூபாயாக குறைத்துள்ளது. இந்த நிதி தொகையானது தேவை இருப்பின் அதிகரிக்கப்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, 100 நாள் வேலைத்திட்டத்தில் சரிவர ஊதியம் கிடைக்கப்பெறுவதில்லை, வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆட்கள் வேலைக்கு வராமல் ஊதிய கணக்கு காட்டப்படுகிறது என பல்வேறு குற்றசாட்டுகள் எழும் வேளையில், மத்திய அரசு நிதியை குறைத்து இருப்பது, 100 நாள் வேலை திட்டம் முடங்கி விடுமோ என்ற அதிர்வலையை மக்கள் மனதில் எழச்செய்துள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…