குறைக்கப்பட்ட நிதி.! முடங்குகிறதா மத்திய அரசின் 100 நாள் ஊரக வேலை திட்டம்.?

100 days work scheme

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ” மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்”.  இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களுக்கு உடலுழைப்பு சார்ந்த ஊரக பகுதி வேலைகள் தொடர்ந்து 100 நாட்களுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒருநாள் சம்பளத்தை மத்திய அமைச்சகமானது, தொழிலாளர் ஊதிய உயர்வு சட்டம் 6சியின் படி அவ்வப்போது சம்பள விகிதம் உயர்த்தப்படும். இந்த சம்பள விகிதமானது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக உயரத்தப்படும்.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழக்த்தில் 100 நாள் வேலை திட்டத்தின் சம்பள விகிதமானது 4.63 சதவீதம் உயர்த்தப்பட்டு,  281 ரூபாயாக இருந்த ஒருநாள் ஊதியம் 294 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட சதவீதம் படி சம்பள உயர்வை மதியா அரசு அமல்படுத்தி இருந்தது.

ஆனால் அதே சமயம் தற்போது 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கும் தொகையை வெகுவாக குறைத்து ஊரக வேலைத்திட்ட ஊழியர்களுக்கு மத்திய அரசு அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த 2022 – 2023ஆம் நிதியாண்டில் 89,000 கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு இந்த நடப்பாண்டில் 60,000 ரூபாயாக குறைத்துள்ளது. இந்த நிதி தொகையானது தேவை இருப்பின் அதிகரிக்கப்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, 100 நாள் வேலைத்திட்டத்தில் சரிவர ஊதியம் கிடைக்கப்பெறுவதில்லை, வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆட்கள் வேலைக்கு வராமல் ஊதிய கணக்கு காட்டப்படுகிறது என பல்வேறு குற்றசாட்டுகள் எழும் வேளையில், மத்திய அரசு நிதியை குறைத்து இருப்பது, 100 நாள் வேலை திட்டம் முடங்கி விடுமோ என்ற அதிர்வலையை மக்கள் மனதில் எழச்செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்