மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை வழங்க, மத்திய அரசு 1.10 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வருவாய் வெகுவாகக் குறைந்தது. இந்நிலையில், மத்திய அரசின் கணக்கீட்டுப்படி, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு 2.35 லட்சம் கோடி. இதில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் 97,000 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கிடையில், மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க, மத்திய அரசு 1.10 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதியானது மாநிலங்களுக்கு, திருப்பி செலுத்த கூடிய முறையில், ஜிஎஸ்டி இழப்பீடு வரிக்கு பதிலாக கடனாக வழங்கப்பட உள்ளது. இதன் முதல் மற்றும் வட்டி தொகையானது இழப்பீட்டு தொகையில் இருந்து கழிக்கப்படும். மத்திய அரசின் நடப்பாண்டு பற்றாகுறையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே போல, மாநிலங்கள், மத்திய அரசு இணைந்து வாங்கும் கடன் தொகையும் உயராது என அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…