கொரோனா சமூக பரவலாகியுள்ளதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் – மாநிலங்களவை எம்பி.!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக உள்ளது என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என சஞ்சய் சிங்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவிக் கொண்டே செல்வதால் அனைத்து நாடுகளிலும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை  மத்திய அரசு ஒத்துக் கொள்ளவில்லை என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் கூறினார். இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வைரசை கட்டுப்படுத்துவதில் டெல்லி தான் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள அவர், நோய்த்தொற்று எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே தான் இந்த தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. இதற்கு பெரிய அளவில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் அதிக சோதனைக் கருவிகளை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் ஒரு பில்லியனுக்கு 1,47,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன நிலையில், ரஷ்யாவில் ஒரு மில்லியனுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் போதுமான அளவு சோதனை கருவிகள் இல்லை மற்றும் சோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே இந்த சமூக பரவலை கட்டுப்படுத்த விரைவில் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

34 minutes ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

40 minutes ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

2 hours ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

3 hours ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

3 hours ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

3 hours ago