கொரோனா தொற்று அதிகரிப்பு…! மத்திய அரசு கடிதம்…

Default Image

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழ்நாடடில் ஏப்ரல் 3-ஆவது வாரத்தில் 11 மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் இருந்தது என கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுபோல, தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள 8 மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 12,491 ஆக அதிகரித்திருந்த கொரோனா தொற்று இன்று 11,692 ஆக சற்று குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65,286 லிருந்து 66,170 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கை 5,31,230 லிருந்து 5,31,258 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,48,57,992 லிருந்து 4,42,72,256 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்