ஊட்டச்சத்து குறைபாடு – அரசு முக்கிய ஆலோசனை!
நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத் திட்டம் குறித்து மாநில அரசுகளுடன் இன்று மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறது.
அதன்படி,டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்துகிறார்.தமிழகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொள்கிறார்.
குறிப்பாக,இந்த கூட்டத்தில் உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.