தூக்கு தண்டனைக்கு பதிலாக வேறு வழியில் மரண தண்டனை.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய தகவல்.!
மரண தண்டனையை நிறைவேற்ற வேறு வழியை ஆராய மத்திய அரசு ஓர் குழுவை நியமிக்க உள்ளது.
இந்தியாவில் மரண தண்டனை என்பது உச்சபட்ச தண்டனையாக செயல்பாட்டில் இருக்கிறது. இந்த மரண தண்டனையானது தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஓர் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், தூக்கிலிடபட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு மாற்றாக வலியற்ற முறைப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுவகையில், மரண தண்டனையினை தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றுவதற்கு மாற்றாக வலியற்ற முறையில் மரண தண்டனை நிறைவேற்ற விரைவில் மத்திய அரசு ஓர் குழு ஒன்றை அமைக்க உள்ளது என குறிப்பிடப்பட்டது.