உலகம் முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா,பிக் பாஸ்கெட்,டொமினோஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தளங்களிலிருந்து,பல ஆயிரக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில்,மத்திய அரசின் பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி நடந்திருப்பதாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக,மத்திய அரசு அனுப்பியுள்ள எச்சரிக்கை அறிக்கையில்: உயர்அதிகாரிகளின் வாட்ஸ்-அப் கணக்கிற்கும்,மெசேஜ்களுக்கும் லிங்க் ஒன்றை அனுப்பி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தகவல்களை பதிவு செய்யுமாறு ஹேக்கர்கள் கூறுவதாகவும்,அவ்வாறு அந்த லிங்கை திறந்தால் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம் போன்று போலியான இணையதளம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து,nic.in மற்றும் gov.in போன்ற தளங்களை குறிவைத்து தாக்குதல் நடப்பதாகவும்,இதற்கான போலி லிங்குகள் மற்றும் இணையதளம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,அதிகாரிகளின் தகவல்களை ஹேக் செய்வதன் மூலமாக,பெரிய அளவில் சதித்திட்டம் நடக்க வாய்ப்புள்ளதால்,உயர் அதிகாரிகள் தங்களுடைய இமெயில் ஐடிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…