புதிய கல்விக் கொள்கையின் மூலமாக பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கு குழு அமைத்தது மத்திய அரசு…!
புதிய கல்விக் கொள்கையின் மூலமாக பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கு குழு அமைத்தது மத்திய அரசு.
கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் இருந்து வரக் கூடிய சூழலில், இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட வரைவுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.