#Breaking : “சட்டப்படி செயல்படாவிட்டால்,விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” – அரசு இறுதி எச்சரிக்கை….!
- புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்.அவ்வாறு,சட்டப்படி செயல்படாவிட்டால்,விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.,
- ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது,சமூக ஊடகங்களுக்கான புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.மேலும்,இந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள சமூக ஊடகங்களுக்கு 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது.
- அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்,
- அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
- சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்.மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.
அவ்வாறு,புதிய விதிகளை ஏற்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து,இந்த காலஅவகாசமானது கடந்த மே 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதன்காரணமாக,புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து,கூகுள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள்,இந்தியாவில் தங்களுக்கான குறைதீர்க்கும் அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து,நீண்ட கருத்து வேறுப்பாட்டிற்கு பிறகு மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.
ஆனால்,இதுவரை குறைதீர்க்கும் அதிகாரியை நியமிக்காமல் இருந்தது.
இந்நிலையில்,அரசின் தகவல் தொடர்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,சட்டப்படி செயல்படாவிட்டால்,விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.