குறைந்தபட்ச ஆதரவு விலை: விளை பயிர்களுக்கான விலையை திருத்தம் செய்தது மத்திய அரசு ..!
புதுடெல்லி: விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக பருப்பு, எண்ணெய் வித்துக்கள், நெல், பருத்தி, தினை மற்றும் சோளம் போன்ற முக்கிய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அமைச்சரவை தற்போது புதன்கிழமை விலைமாற்றம் செய்துள்ளது.
கடந்த ஆண்டுகளில், அதாவது 2013-14 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த விலைகள் ஒரு பெரிய உயர்வைக் குறிப்பதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறி இருக்கிறார். கடந்த MSP சுழற்சியை விட ரூ.35,000 கோடி அதிகரிப்பைக் குறிக்கும் வகையில், MSPயின் காரணமாக விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் கோடியைப் பெறுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
-
- நெல் – முந்தைய MSPயில் இருந்து ரூ.117 அதிகரித்து தற்போது ரூ.1.310 ஆக உயர்ந்துள்ளது.
- பருத்தி – ரூ.7,121
- பருத்தி 2 – முந்தைய MSPயில் இருந்து ரூ.501 அதிகரித்துள்ளது, தற்போது ரூ.7.521 ஆக உள்ளது.
- சர்க்கரைச்சோளம் – ரூ 3,371
- ராகி – 2,490
- கம்பு – ரூ 2,625
- மக்காச்சோளம் – ரூ.2,225
- பாசிபருப்பு – ரூ 8,682
- துவரம் பருப்பு – கடந்த MSP ரூ 7,550 லிருந்து ரூ. 500 அதிகரித்துள்ளது.
- உரத் – கடந்த MSP ரூ 7,400லிருந்து தற்போது ரூ 450 அதிகரித்துள்ளது.
- எள் – ரூ.9,267 லிருந்து தற்போது ரூ.632 க்கு அதிகரித்துள்ளது.
- நிலக்கடலை – ரூ.6,783
- கடுகு – ரூ 8,717
- சூரியகாந்தி – ரூ.7,280
- சோயாபீன் – ரூ.4,892
#Cabinet approves Minimum Support Prices (MSP) for Kharif Crops for Marketing Season 2024-25
The highest absolute increase in MSP over the previous year has been recommended for oilseeds and pulses#CabinetDecisions pic.twitter.com/zhqhXyNzut
— Sheyphali B. Sharan (@DG_PIB) June 19, 2024