சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியை குறைத்த மத்திய அரசு.! நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அளித்த தகவல்.!
2022-2023 நிதியாண்டில் சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியை மத்திய அரசு 38 சதவீதம் குறைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கேட்கும் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் அதற்கான பதிலை எழுத்து பூர்வமாக அளிப்பார்கள்.
அதன்படி, சிறுபான்மையினர் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி விவரம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் கூறியுள்ளார்.
அதில், நடப்பாண்டில் சிறுபான்மையினர் நலனுக்காக 3,097 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார் . ஆனால் கடந்த 2022-2023 ஆம் நிதியாண்டில் 5,020 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 38 சதவீதம் குறைவாக சிறுபான்மையினர் நலன் மேம்பாட்டு நிதி குறைக்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் அளித்த தகவலின் பெயரில் தெரியவந்துள்ளது.