சமூக வலைதளங்கள் 24 மணி நேரத்திற்குள் இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு உத்தரவு…!

Default Image

சமூக வலைதளங்களில் உள்ள போலி கணக்குகள் மற்றும் போலி படங்கள் போன்றவற்றை 24 மணி நேரத்தில் நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில்,புதிய விதிகளின்படி,டுவிட்டர்,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சினிமா, அரசியல் பிரபலங்கள்,தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் படத்துடன் போலி கணக்குகள் தொடங்கியிருப்பது குறித்த புகார் மீது சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது,நடிகர்,கிரிக்கெட் வீரர்,அரசியல் தலைவர்கள் போன்றவர்களின் படங்களை டிபி(DP)யாக வைத்து கணக்கு தொடங்கியிருப்பது குறித்து குறிப்பிட்ட நபர்கள் புகார் தெரிவித்தால்,ஒரே நாளில் சமூக வலைதள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்