மத வழிபாட்டு தலங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு!
மத வழிபாட்டு தலங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் மத வாழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அவ்வாறு மத வழிபாட்டு தலங்களை திறக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்.
- அடிக்கடி கிருமிநாசினிகள் மூலம் வழிபாட்டு தலங்களை தூய்மைப்படுத்த வேண்டும்.
- எப்போதும் ஒருவருக்கொருவர் 6 ஆதி இடைவெளி இருப்பதாய் உறுதி செய்ய வேண்டும்.
- சிலைகள் மற்றும் புனித புத்தகங்களை தொடுவதை அனுமதிக்க கூடாது.
- பிரசாதம் கொடுக்க கூடாது. புனித நீரை தெளிக்க கூடாது. போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.