விமான பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு.!
விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார்.இந்நிலையில், பயணிகளுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், விமான நிலையத்திற்குள் வரும்போது உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாக பயணிகள் வர வேண்டும்.
பயண நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வர வேண்டும். 14-வயதிற்குட்பட்ட சிறுவர்களைத் தவிர மற்றவர்கள் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியைவைத்திருக்க வேண்டும். அடுத்த 4 மணி நேரத்திற்கு பயணிக்க இருப்பவர்கள் மட்டுமே விமான நிலைய முனையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.