370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு .
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டும் யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும் என அமித்ஷா அறிவித்தார்.
இதனிடையில் மாநிலங்களவையில் கடும் அமளியும் எதிர்ப்பும் கிளம்பியது. காஷ்மீர் அதன் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என அமித்ஷா கூறினார் .
மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 61 வாக்குகளும் பதிவாகியது.மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும் , எதிராக 72 வாக்குகளும் வாக்களித்தனர். இறுதியாக இந்த மசோதா மக்களவையிலும் , மாநிலங்களவைலும் இரண்டிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு .அந்த அரசாணையில் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசாணையை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025