நாளை ஹனுமான் ஜெயந்தி.! சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்.! மத்திய அரசு அறிவுறுத்தல்.!
நாளை ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்து சமய கடவுள்களில் ஒருவரான ஹனுமன் பிறந்த தினமானது ஹனுமன் ஜெயந்தி என அழைக்கப்படுகிறது. இந்த ஹனுமன் ஜெயந்தியானது நாளை ஏப்ரல் 6ஆம் தேதியில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
ஹனுமன் ஜெயந்தி :
இந்த ஹனுமன் ஜெயந்தியானது, ஆந்திரா, தெலுங்கானாவில் வெகு விமர்சையாக 41 நாள் விரதம் இருந்து கொண்டாடப்பட உள்ளது. கர்நாடகாவில் ஹனுமன் விரதம் என என கொண்டாடப்பட உள்ளது. அதே போல கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு :
இந்த ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், ஹனுமன் ஜெயந்தி அன்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் காரணிகளை ஆராய்ந்து அதனை களைய வேண்டும். என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது .