பாகிஸ்தான் பிரதமருக்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசு…!

இந்திய வான்வெளியை பயன்படுத்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறை பயணமாக இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக இலங்கைக்கு முதன் முறையாக செல்ல உள்ளார். இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்தி செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரெஷி மற்றும் தொழிலதிபர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து உள்ளார். இவர்களது சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்காத நிலையில், இம்ரான் கானுக்கு தற்போது இந்தியா அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025