#Breaking: 3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் தேதி – மத்திய அரசு அறிவிப்பு!
நவ.29 ஆம் தேதியன்று 3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து,பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கூறியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் காஷ்யப் அவர்கள், முன்னுரிமை அடிப்படையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
அதன்படி,குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்திலேயே வேளாண் சட்டம் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பாரக்கப்பட்டது.
இந்நிலையில்,விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நவ.29 ஆம் தேதியன்று 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர் அறிவித்துள்ளார்.
மேலும்,மூன்று விவசாயச் சட்டங்கள் ரத்து என்ற அறிவிப்புக்குப் பிறகு, விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்றும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
The bill to repeal the three farm laws will be tabled in the Parliament on the first day of the winter session (on Nov 29): Union Agriculture Minister Narendra Singh Tomar pic.twitter.com/mVueT3JzzO
— ANI (@ANI) November 27, 2021