#Bigbreaking:18 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு ஆரம்பம்…!

Published by
Edison

18 வயதுக்கும் மேற்பட்டோர்   தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் போன்ற 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,கொரோனா பரவல் மேலும் அதிகரிப்பதைத் தொடர்ந்து மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மத்திய அரசானது அனுமதி அளித்துள்ளது.

மேலும் இதனால்,தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு,தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைப்பவர்கள் நேரடியாக மருத்துவமனைகளுக்கோ அல்லது தடுப்பூசி மையங்களுக்கோ செல்லாமல் www.cowin.gov.in என்ற அரசின் இணைய தளம் அல்லது ஆரோக்கிய சேது என்ற ஆப் மூலமாக ஏப்ரல் 28 ஆம் தேதியிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.இருப்பினும்,நேரத்தை குறிப்பிடாமல் அரசின் அறிக்கை இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது,தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஏப்ரல் 28 ஆம் தேதி மாலை 4 மணியிலியிருந்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று நேரத்தைக் குறிப்பிட்டு மத்திய அரசானது தகவல் வெளியிட்டுள்ளது.

18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு  செய்யும்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை எடுத்து செல்வது அவசியம்.மேலும்,மொபைல் போன் நம்பரைப் பயன்படுத்தியும் பதிவு செய்து கொள்ளலாம்.ஆனால்,ஒரு மொபைல் போன் நம்பரில் நான்கு பேர் மட்டுமே பதிய முடியும்.அதுமட்டுமல்லாமல்,தாங்கள் விரும்பும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!

பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

35 minutes ago
இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!

இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!

திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…

3 hours ago
திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!

திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!

சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…

3 hours ago
விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…

விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…

ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…

4 hours ago
பாஜகவுடன் கூட்டணி., அதிமுகவில் இருந்து விலகுகிறேனா.? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி! பாஜகவுடன் கூட்டணி., அதிமுகவில் இருந்து விலகுகிறேனா.? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி! 

பாஜகவுடன் கூட்டணி., அதிமுகவில் இருந்து விலகுகிறேனா.? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!

சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…

4 hours ago
Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை…Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை…

Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை…

சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…

5 hours ago