#Bigbreaking:18 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு ஆரம்பம்…!
18 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் போன்ற 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,கொரோனா பரவல் மேலும் அதிகரிப்பதைத் தொடர்ந்து மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மத்திய அரசானது அனுமதி அளித்துள்ளது.
மேலும் இதனால்,தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு,தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைப்பவர்கள் நேரடியாக மருத்துவமனைகளுக்கோ அல்லது தடுப்பூசி மையங்களுக்கோ செல்லாமல் www.cowin.gov.in என்ற அரசின் இணைய தளம் அல்லது ஆரோக்கிய சேது என்ற ஆப் மூலமாக ஏப்ரல் 28 ஆம் தேதியிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.இருப்பினும்,நேரத்தை குறிப்பிடாமல் அரசின் அறிக்கை இருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது,தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஏப்ரல் 28 ஆம் தேதி மாலை 4 மணியிலியிருந்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று நேரத்தைக் குறிப்பிட்டு மத்திய அரசானது தகவல் வெளியிட்டுள்ளது.
18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யும்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை எடுத்து செல்வது அவசியம்.மேலும்,மொபைல் போன் நம்பரைப் பயன்படுத்தியும் பதிவு செய்து கொள்ளலாம்.ஆனால்,ஒரு மொபைல் போன் நம்பரில் நான்கு பேர் மட்டுமே பதிய முடியும்.அதுமட்டுமல்லாமல்,தாங்கள் விரும்பும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.