மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.890.32 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு .!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பல தடுப்பு நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசு எடுத்து வருகிறது.
கடந்த மார்ச் 24-ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது பிரதமர் மோடி நாட்டில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் என கூறினார்.
இந்நிலையில், இரண்டாவது தவணையாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2-வது தவணையாக ரூ.890.32 கோடி விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தவணையாக ரூ.3,000 கோடி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியது.