#Breaking : ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மத்திய அரசு நிபந்தனை.!

Default Image

ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணமாக பாரத ஒற்றுமை யாத்திரிறையை மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்த நடைபயணம் ராஜஸ்தானில் தொடர்ந்து வருகிறது.

அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உருவெடுத்து வருவதன் காரணமாக மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொண்டது.

தற்போது அதே போல, ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை யாத்திரைக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

அதில், ஒற்றுமை யாத்திரையில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும், மாநாட்டில் பல்லாயிரக்கனான தொண்டர்கள், கலந்து கொள்கிறார்கள் அவர்கள் நலன் கருதி முகக்கவசன் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும்,

ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்பவர்கள் அதற்கு பின்னர் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இல்லையென்றால் மக்கள் நலன் கருதி தற்போது ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக்கொள்ளுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்