மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை – ராகுல் காந்தி
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் குறித்தும் பொது முடக்கம் பற்றியும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தனிமையாக செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
மேலும் இது விமர்சிப்பதற்கான நேரமில்லை என்றும் அதே நேரத்தில் பொது முடக்கத்தில் இருந்து மீள சரியான உத்தியை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள லாக்டவுன் தொடர்பாக மத்திய அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.