லைசென்ஸ் பெற அமலில் இருக்கும் குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு!
வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அமலில் இருக்கும் குறைந்த பட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியா போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வாகனம் இயக்கம் திறன் பெற்றிருந்தாலும் உரிமம் இல்லாததால் பலர் வாகனம் இயக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1989 பிரிவு 8 ன் படி வாகன உரிமம் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில், இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து திருத்தி புதிய அரசாணை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதனால், வேலை வாய்ப்பற்ற பலரும் வேலை வாய்ப்பினை பெறுவர் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.