#Breaking:சற்று முன்…காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!
காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி,டெல்லி,மும்பை சென்னை மற்றும் தமிழகத்தில் சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக,அவரது மகன் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பான நிறுவனங்களுக்கு 2010 மற்றும் 2014 ஆகிய வருடங்களுக்கு இடையே வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது தொடர்பாக,முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Central Bureau of Investigation is conducting searches at multiple locations (residence and office) of Congress leader Karti Chidambaram, in connection with an ongoing case, says his office to ANI.
(file pic) pic.twitter.com/YPzcVLUTo6
— ANI (@ANI) May 17, 2022
ஏற்கனவே,காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது,கடந்த 2006 ஆம் ஆண்டில் ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு தொடர்பாக அவரது வீடு மற்றும் சென்னை,டெல்லியில் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.