Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் நேர்ந்த கலவரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிலும், ஒரு கொடூர கும்பல் இரு பெண்களை நிர்வாணமாக வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரது நெஞ்சத்தையும் பதற வைத்தது.
இந்த கொடூர சம்பவம் குறித்து, CBI குழு அமைத்து விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கைகளானது கவுகாட்டி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. CBI அறிக்கையில் வெளியான சில முக்கிய தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மணிப்பூர் கலவரத்தின் போது , மெய்தி இனத்தை சேர்ந்த கும்பல், குக்கி இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேவாலயங்கள், குடிசைகளுக்கு தீ வைத்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தின் போது ஒரு கும்பல் கோடரி உள்ளிட்ட ஆயுதங்களோடு கிராமத்திற்குள் புகுந்தது. அந்த கும்பல் ஒரு வீட்டினுள் நுழைந்து00, ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களை வலுக்கட்டாயமாக வீதிக்கு இழுத்து வந்து, அவர்களில் ஒருவர் மற்றும் அவரது பேத்தியைய ஒரு திசையிலும், இரண்டு பெண்கள் மற்றும் அவர்களின் தந்தை, அந்த கிராமத் தலைவர் ஆகியோரை ஒரு திசையிலும் அந்த கும்பல்கள் இழுத்து சென்றுள்ளது.
அந்த சமயம், இரு பெண்களும் எப்படியோ தப்பித்து அருகில் உள்ள போலீஸ் வாகனத்தில் ஏறினர் என்றும், அந்த காருக்குள் இரண்டு போலீசார் இருந்தனர் என்றும், அவர்களிடம் வாகனத்தை எடுக்க சொல்லி பெண்கள் கெஞ்சினர் ஆனால், காவலர்கள் வாகனத்தில் ’சாவி இல்லை’ என்று பதிலளித்ததாகவும், மேலும், உதவிக்கு மறுத்ததாகவும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்னர், அந்த வாகன ஓட்டுநர் திடீரென வாகனத்தை ஓட்டிச் சென்று, சுமார் 1,000 பேர் கொண்ட கும்பலிடம் இந்த பெண்களை கொண்டு சென்று விட்டுள்ளனர். மீண்டும், அந்த பெண்கள், காவல்துறையிடம் வாகனத்தை அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்லுங்கள் என கெஞ்சியுள்ளனர் என்றும், ஆனால் அவர்கள் அமைதியாக இருந்துள்ளார் என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு நடுவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வன்முறை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கும்பல் வாகனத்தை நெருங்கியவுடன் போலீசார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த இரு பெண்களின் ஆடைகளையும் அந்த கும்பல் கிழித்து நிர்வாணமாக்கினர். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அருகிலுள்ள இடத்தில் முழு கொடூர சம்பவத்தையும் நேரில் பார்த்துள்ளார் என்று சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்ற செயல் தொடர்பாக , குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான கூட்டுப் பலாத்காரம், கொலை, குற்றவியல் சதி மற்றும் பெண்ணை மானபங்கம் படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட ஹுய்ரேம் ஹெரோடாஷ் மெய்டே (32 வயது), நிங்கோம்பம் டோம்பா சிங் (18 வயது) ஆகியோர் மணிப்பூர் காவல்துறையால் கடந்த ஜூலை 20 அன்றே கைது செய்யப்பட்டனர், அருண் குண்டோங்பாம் (31 வயது) ஜூலை 21 அன்று மணிப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். புக்ரிஹோங்பாம் சுரஞ்சோய் மெய்த்தே (24 வயது) ஜூலை 22 அன்று மணிப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார், நமீரக்பம் கிரம் மெய்டேய் (30 வயது) ஜூலை 24 அன்று கைது செய்யப்பட்டார், கடைசியாக, ஜூலை 20 அன்று மணிப்பூர் காவல்துறையினரால் 18 வயதுக்கு உட்பட்ட சிறாரும் கைது செய்யப்பட்டதாக CBI குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…