மணிப்பூர் கொடூரம்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு.!
மணிப்பூரில் இரு பெண்களை ஆடைகளின்றி ஒரு கும்பல் இழுத்து தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐ விசாரணை செய்ய உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரமானது ஊரறிந்த தகவலாக மாறிவிட்டது. இந்த கலவரத்தின் போது இரு பெண்களை ஒரு கொடூர கும்பல் ஆடைகளின்றி இழுத்து சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியான பிறகு மணிப்பூரின் நிலவரம் இந்தியாவையே பதறவைத்தது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், இது தொடர்பான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க ஆரம்பித்தன.
இந்நிலையில், இரு பெண்கள் பாதிக்கப்பட்ட வீடியோ தொடர்பாகவும், மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மணிப்பூர் கொடூர வீடியோ தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.