மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.!
மணீஷ் சிசோடியவை மார்ச் 20ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வார ஞாயிற்று கிழமை (பிப்ரவரி 26) டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை , டெல்லில் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
சிசோடியா கைது : டெல்லி புதிய மதுபான கொள்கை சம்பந்தமாக அரசுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணபரிவார்த்தனை நடைபெற்றதாகவும் கூறி மணீஷ் சிசோடியாவை பிப்ரவரி 26ஆம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிஐ கைது செய்தது.
5நாள் நீதிமன்ற காவல் : இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர், சிபிஐ நீதிமன்றத்தில் அவருக்கு 5 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற காவல் முடிந்து மீண்டும் அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
நீதிமன்றம் புதிய உத்தரவு : தற்போது மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், மணீஷ் சிசோடியா தனது டெல்லி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.