டெல்லி : சட்டவிரோத பணப்பரிவர்த்தணை வழக்கு விசாரணையில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக டெல்லி அமலாக்கத்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என ANI செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் ஒரு தனியார் நகைக்கடைக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், நகைக்கடைக்காரரின் மகனை விசாரணையில் இருந்து விடுவிக்க டெல்லி அமலாக்கத்துறை அதிகாரி முயற்சித்ததாக கூறப்படுகிறது.
வழக்கில் இருந்து விடுவிக்க சுமார் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐக்கு கிடைத்த புகாரின் பெயரில் டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரி சந்தீப் சிங் யாதவ் என்பவரை கைது செய்யப்பட்டுள்ளார் என சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் ANI செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
சிபிஐற்கு கிடைத்த புகாரின் பெயரில் குற்றம் சாட்டப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மேற்கண்ட இடத்திற்கு வந்து லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார் என்றும், அமலாக்கத்துறை அதிகாரிக்கு எதிராக தற்போது எப்ஐஆர் பதிவு செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…