ரூ.20,00,000 லஞ்சம்.! அமலாக்கத்துறை அதிகாரியை அதிரடியாய் கைது செய்த சிபிஐ.! 

Arrest

டெல்லி :  சட்டவிரோத பணப்பரிவர்த்தணை வழக்கு விசாரணையில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக டெல்லி அமலாக்கத்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என ANI செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் ஒரு தனியார் நகைக்கடைக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், நகைக்கடைக்காரரின் மகனை விசாரணையில் இருந்து விடுவிக்க டெல்லி அமலாக்கத்துறை அதிகாரி முயற்சித்ததாக கூறப்படுகிறது.

வழக்கில் இருந்து விடுவிக்க சுமார் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐக்கு கிடைத்த புகாரின் பெயரில் டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரி சந்தீப் சிங் யாதவ் என்பவரை கைது செய்யப்பட்டுள்ளார் என சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் ANI செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

சிபிஐற்கு கிடைத்த புகாரின் பெயரில் குற்றம் சாட்டப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மேற்கண்ட இடத்திற்கு வந்து லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக ​ பிடிபட்டார் என்றும், அமலாக்கத்துறை அதிகாரிக்கு எதிராக தற்போது எப்ஐஆர் பதிவு செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள்  ஈடுபட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்