நோயாளிக்கு பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விவகாரம்.! மருத்துவமனையை இடிக்க அதிரடி உத்தரவு.!
உத்தர பிரதேசத்தில் டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி சாறு ஏற்றப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் அந்த மருத்துவமனையை இடிப்பதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மருத்துவமனையில் டெங்கு நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி சாறு தவறுதலாக ஏற்றப்பட்டு அவர் உயிரிழந்தார், இதனால் கடந்த வாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரயாக்ராஜில் உள்ள அந்த குளோபல் மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி மையம் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டது எனக்கூறி அதை இடிப்பதற்கான நோட்டீசை அனுப்பியுள்ளது. மேலும் அதிகாரிகள் உத்தரவின்படி வெள்ளிக்கிழமைக்குள் மருத்துவமனையை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவின்படி வெள்ளிக்கிழமைக்குள் மருத்துவமனையை காலி செய்ய வேண்டும்.
In UP’s Prayagraj, the development authority has issued demolition notice to the the hospital where a dengue patient died during treatment. Family of the deceased had alleged that the patient was given Mosambi juice in the drip instead of platelets. pic.twitter.com/T5a34EtIyY
— Piyush Rai (@Benarasiyaa) October 25, 2022