ராபர்ட் வதேரா மீதான வழக்கு : ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட் வதோரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க ராபர்ட் வதேராவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.