நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான வழக்கு…! நாளை தீர்ப்பு அளிக்கிறது தேசிய பசுமை தீர்ப்பாயம்…!
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கிறது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ மையம் அமைப்பதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு ஒன்றை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்தனர்.இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது தேசிய பசுமை தீர்ப்பாயம்.